ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் – அமராவதி தம்பதி. தினக்கூலி தொழிலாளியான சுரேஷ் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொலைபேசியில் அதிகம் பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமராவதி சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்த சமயம் தண்ணீரை கொதிக்க வைத்து அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.