நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.  இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு, தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தினமும் அவரது ரசிகர்களும், கட்சியினரும் வருகின்றனர். அவர்களின் பசியாற்றுவதற்காக, தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்க, அக்கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்