கேரள மாநிலத்தின் முதல்வராகப் பினராயி விஜயன் இருக்கும் நிலையில் அவர் கட்சியில் எம்எல்ஏவாக நடிகர் முகேஷ் இருக்கிறார். இவர் மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவிலும் ஐந்தாம் படை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் பல நடிகர்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகிறார்கள். இதன் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கம் கூட கலைக்கப்பட்டது.

முன்னதாக நடிகர் முகேஷ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் அவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதாவது எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் முகேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் அந்த புகாரியின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் மீண்டும் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளா அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.