நாடு முழுவதும் அரசு மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும் ஜிம்பர் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு மத்திய அரசு சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் மருத்துவ கலந்தாய்வு குழுவானது இணையத்தில் நடத்தி வருகிறது.

அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக இன்று தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 6ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் சுற்று ஒன்பதாம் தேதியும்,  மூன்றாம் சுற்று ஆகஸ்டு 31ஆம் தேதியும் நடைபெறுகிறது.