
சென்னை குரோம்பேட்டை பகுதியில் வசித்து வரும் சுந்தரி என்று 63 வயது மூதாட்டி சர்க்கரை நோயாளி என்பதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் மூதாட்டியிடம் வந்து பேசிய மாற்றுத் திறனாளி நபர் ஒருவர் மூதாட்டியிடம் மருத்துவ காப்பீடு செய்து தருவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.
இதற்காக அவரிடம் இருக்கும் நகையை காட்ட கூறினார். அவர் பேசியதை நம்பி மூதாட்டி தன்னுடைய கழுத்தில் அணிந்து இருந்த ஆறு சவரன் தங்க சங்கிலியை கழட்டி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த மாற்றுத்திறனாளி நகையுடன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். இது குறித்து மூதாட்டி அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.