இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 12 நாட்களாக மோதல் நீடித்து வரும் நிலையில் காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 500 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பிலிருந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் கிடையாது என்றும் அந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் ஏவிய ராக்கெட் தான் காரணம் என்றும் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பும் வெவ்வேறாக இருந்தாலும் இரண்டுமே இஸ்ரேலுக்கு எதிராக தான் மோதி வருகிறது என்றுகூறப்பட்டுள்ளது.