மராத்தி சினிமா உலகின் தாய் என்று அழைக்கப்படும் சுலோச்சனா லக்தார் காலமானார். இவருக்கு வயது 94. சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 300க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ள இவர் பத்மஸ்ரீ மற்றும் மகாராஷ்டிரா பூஷன் விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.