மரங்களை வெட்டி எடுத்து செல்வதற்கு தேசிய அளவிலான அனுமதி சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.  மரங்களை வெட்டி எடுத்து செல்லவும், அவற்றை எந்தெந்த வகையான பயன்பாட்டிற்கு எடுப்பது என்பது குறித்த விதிமுறைகளும் வகுக்கப்பட்டது,

எந்த வகையான மரங்களை வெட்டுவது யன்படுத்துவது போன்றவை குறித்து விதிகளை தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த விதிகளில் தற்போது புதிதாக திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும்போது மின்னணு முறையிலான அனுமதிச்சீட்டு அல்லது தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். இந்த அனுமதி சீட்டு தேசிய அளவிலான இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.