மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வரை வழங்க ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 9ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இத்திட்டத்தின்படி, 9ஆம் வகுப்புக்கு வருபவர்கள் மரம் நட வேண்டும். இந்த மரத்தை 12ஆம் வகுப்பு வரை பாதுகாக்க வேண்டும் என்றும் திட்டம் கூறுகிறது.

இந்தப் பணியைச் சரியாக முடிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்தார். திட்ட ஆவணம் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.