EPF அமைப்பின் கீழ் இணைந்துள்ள பயனாளிகளின் அடிப்படை ஊதியம் மற்றும் அகல விலைப்படி ஆகியவற்றிலிருந்து 12 சதவீதம் ஒரு நிலையான வைப்புத் தொகை பிஎப் ஆக டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு டெபாசிட் செய்யப்படும் இந்த தொகையை அறிய முதலில் UAN போர்த்தலில் மொபைல் எண்ணை பதிவு செய்து கேஒய்சி செயல்முறையை முடித்த பிறகு 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அதன்பிறகு உங்களின் மொபைல் எண்ணுக்கு பி எஃப் பேலன்ஸ் விவரங்கள் அனைத்தும் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும்.

மேலும் 7738299899 என்ற எண்ணுக்கு நேரடியாக செய்தி அனுப்பினால் பிஎப் இருப்பு தொகையை உடனடியாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதனைத் தவிர EPFO இணையதள முகவரி பக்கத்துக்கு சென்று பணியாளர்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சேவை பக்கத்தில் உள்ள பாஸ்புக் என்ற விருப்பத்தை தேர்வு செய்தும் பிஎஃப் இருப்பு தொகையை நீங்கள் அறியலாம். மேலும் அரசு அறிமுகம் செய்த UMANG என்ற செயலின் மூலமாகவும் pf இருப்புத் தொகையை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.