
மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதி அமைச்சர், 4ம் தேதி புயல், வெள்ளப் பாதிப்புகளைப் பார்ப்பதற்கு ஒரு முறை சென்னை வந்தாரா? என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேசம் என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவித்து, தமிழகம் கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் கோரிய நிதியை தராமல், பேரிடரில் தவிக்கும் தமிழக மக்களை கடுஞ்சொற்களால் விமர்சிக்கிறார். பிரதமர் மற்றும் முதல்வர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பொய் குற்றச்சாட்டுக்களை கூறி தமிழக அரசு மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.