தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து தற்போது சென்னைக்கு திரும்பிய நிலையில் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் கூறியதாவது, அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டது தொடர்பான வீடியோ வெளியானதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெட்கப்பட வேண்டும். ஜி எஸ் டி தொழில் முனைவோர் கூட்டத்தில் நியாயமான கோரிக்கை வைத்தவரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

இப்படி நியாயமான கோரிக்கையை வைத்தவரை நிதி அமைச்சர் கையாண்ட விதத்தை பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு நிச்சயம் நிதி அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றார். மேலும் விசிக மது ஒழிப்பு மாநாட்ட அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளை அழைத்தது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்கு உரிய விளக்கத்தை ஏற்கனவே திருமாவளவனே கொடுத்துவிட்டார் என்று கூறினார்.