நடிகர் பிரகாஷ் ராஜ் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவருக்கு எதிராகத் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமர் மற்றும் லட்சுமணர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக பிரகாஷ் ராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகச் சென்னையில் உள்ள பிரகாஷ் ராஜின் வீட்டிற்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அவதூறு பேச்சுக்காகப் பிரகாஷ் ராஜிடம் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், இது குறித்துத் திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தற்போது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
