
தாஜ்மஹால் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா. இவர் பிரபல இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன். இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் முயற்சியை கைவிடாமல் சினிமாவில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே தான் இருந்தார். எப்படியாவது இயக்குனர் ஆகிவிட வேண்டுமென்ற ஆசையில் பாரதிராஜா, மனிரத்தினம், சங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குனர் ஆகவும் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் துரதிஷ்டவசமாக கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார்.
இவர் இறந்த பிறகு பல பிரபலங்களும் அவர் செய்த உதவிகள் மற்றும் அவருடைய குணம் குறித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் தம்பி ராமையா, மனோஜ் மிகவும் பாவம் அதிகமான அழுத்தம் தான் அவருடைய இறப்பிற்கு காரணம் என்று பேசியிருந்தார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் விகே சுந்தர், “முதலில் சாதுரியன் படத்தில் தான் மனோஜ் நந்தனாவை சந்தித்தார் . பார்த்தவுடன் தன்னுடைய காதலை சொல்லிவிட்டார். தனது ஆஃபாவிற்கு பயந்து இளைய ராஜாவிடம் சென்று திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் நந்தனா வீட்டில் சம்மதிக்க வில்லையாம். பிறகுதான் நந்தனாவின் பெற்றோரிடம் இளையராஜா பேசி சம்மதிக்க வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.