தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் படம் வெளியானது. தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்களுக்கு பிறகு திடீரென இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பொது நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள் என இருவரும் ஒன்று கூட வேண்டிய பல இடங்களில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதே சமயம் ரஜினி ரசிகனான தனுஷ் லால் சலாம் படத்திற்கு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் லால் சலாம் படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தியதோடு என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் என்று ரஜினி போட்ட பதிவையும் ரீ போஸ்ட் செய்துள்ளார் .இந்த பதிவு ரசிகர்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது.