ஹைதராபாத்தில் மனைவியை கொலை செய்து குக்கரில் உடல் பாகங்களை வேகவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற குருமூர்த்தி என்பவர் தன்னுடைய மனைவி மாதவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தன்னுடைய மனைவியை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வைத்து உடல் பாகங்களை வேகவைத்து பின்னர் மாடியில் அதனை காய வைத்து ஏரியில் கரைத்ததாக கூறினார். இதேபோன்று எலும்புகளையும் கரைத்து அப்புறப்படுத்தியதாக கூறினார். ஆனால் அவர் சொன்ன இடத்தில் உடல் பாகங்களை கண்டறிய முடியவில்லை.

அதோடு வீட்டில் துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக 12 மணி நேரத்தில் உடலை அப்புறப்படுத்தி  ரசாயனம் ஊற்றி கழுவியுள்ளார். இதனால் ஆதாரங்களை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் வீட்டில் உள்ள ஹீட்டரில் இருந்து மாதவியின் தலைமுடி கிடைத்தது. இது பற்றி குருமூர்த்தியிடம் விசாரணை செய்தபோது வாளி தண்ணீரில் சில உடல் பாகங்களை போட்டு ஹீட்டரில் வேகவைத்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு சில பாகங்களை குக்கரில் வைத்து வேக வைத்து அரைத்து அப்புறப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் youtube மற்றும் சில ஆங்கில படங்களை பார்த்துள்ளார். மேலும் தினம் இந்த கொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளிவருவது ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.