அசாம் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் பிகு. பண்டிகை தினங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட தங்களுடைய பாரம்பரியமான உடை அணிந்து பிகு நடனம் ஆடுவார்கள். இந்நிலையில் அசாமைச் சேர்ந்த பிகு நடன கலைஞரான பிரியங்கா என்பவர் தன்னுடைய நடன வீடியோக்களை தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய குழந்தையுடன் சேர்ந்து பாரம்பரிய உடை அணிந்து நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தக் குழந்தை தன் தாயுடன் இணைந்து பாடலுக்கு மிகவும் அழகாக சுட்டித்தனமாக நடனமாடுவது வெகுவாக கவர்கிறது. மேலும் அந்த குழந்தை தன் தாய்க்கு நிகராக நடனமாடும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது