
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் தாவணியால் தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தன் மனைவியின் பிணத்தை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அவர் தன்னுடைய தம்பி உட்பட உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தம்பி காசியாபாத்துக்கு சென்றுள்ளார். அப்போது படுக்கையில் பெண் சடலமாக கிடந்த நிலையில் அவருடைய கணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.