மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியோனி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் ஒரு புள்ளிகள் சரணாலய பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி ஒரு புலியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதன் மரணம் இயற்கையானது அல்ல என்பதும் அதன் நகங்கள் வெட்டப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. அதோடு  அந்த புலியின் கூர்மையான பற்களும் வெட்டப்பட்டிருந்ததால் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர்.

அந்த விசாரணையில் ராஜ்குமார், ஜாம்சிங், ஷாபிலால், ரத்னோஸ் பார்டே, மனிஷ் உய்தே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ராஜ் மற்றும் ஜாம் இருவரும் தங்கள் மனைவிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக ஒரு மாந்திரீகரிடம் சென்ற போது அவர் புலியின் நகம் மற்றும் தோள் ஆகியவற்றை கொண்டு வந்தால் அவற்றை வைத்து மாந்திரீகம் செய்து மனைவிகளை கட்டுப்படுத்த உதவுவதாக கூறியுள்ளார். இதன் காரணமாக அவர்கள் புலியின் நகம் தோள் ஆகியவற்றை கொண்டு சென்றுள்ளனர். இதற்கு மற்ற மூவரும் உதவி செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.