உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் 21 வயது இளம்பெண் வசித்து வந்தார். கடந்த 23ஆம் தேதி இளம்பெண் காணாமல் போனதால் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர். அப்போது இளம்பெண் சகோதரியின் கணவர் ஆதிஷ் மீது போலீசருக்கு சந்தேகம் வந்தது அவர். அவரை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. ஆதிஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி வந்தார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று ஆதிஷ் தனது மனைவியின் சகோதரி என்று பார்க்காமல் நண்பர்களுடன் இணைந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்து எதுவும் தெரியாதது போல நாடகமாடியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.