
சீனாவின் 31 வயதான Lin Shu என்ற புதிதாக திருமணமான நபர் தன்னுடைய மனைவி மீதான அளவற்ற அன்பால் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றார். இவர் தனது மனைவி இருக்கும் நகரில் வசிப்பதற்காக தினமும் 320 கிலோமீட்டர் தொலைவு பயணித்து செல்கிறார். காலை ஐந்து மணிக்கு எழுந்து 5.20 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் இவருடைய பயணம் மின்சார சைக்கிள், ரயில் பயணம் மற்றும் மெட்ரோ பயணம் என பல கட்டங்களை கடந்து காலை 9 மணிக்கு அலுவலகத்தைச் சென்றடைகின்றது.
மீண்டும் வீடு திரும்ப 3 முதல் 4 மணி நேரம் ஆகிறது. பயணத்திற்கு செலவிட கூடிய நேரம் அதிகமாக இருந்தாலும் ஏழு வருடங்களாக காதலித்து வந்த தனது மனைவி மீதான அன்பே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மனைவிக்காக பயணிப்பதால் 320 கிலோமீட்டர் பயணம் களைப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.