சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று பார்ப்போரின் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது. கடலில் இறந்த நிலையில் மிதக்கும் திமிங்கலம் ஒன்றின் மீது இருவர் நடனமாடி மகிழும் காணொளி தான் அது. திமிங்கலம் எத்தகைய கம்பீரமான உயிரினம் என்பது அனைவரும் அறிந்ததே. திமிங்கலத்தினால் கடலில் பல நன்மைகள் நடக்கிறது.

சுத்தமான கடலுக்கு திமிங்கலமும் ஒரு முக்கிய காரணம். அத்தகைய திமிங்கலம் இறந்து மிதக்கும் நிலையில் அதன் மீது துள்ளிக்குதித்து நடனமாடும் இந்த காணொளி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமின்றி இறந்த ஒரு உயிரினத்தின் மீது நடனமாடியை இவர்களை நெட்டிசன்கள் பலர் கடுமையாக திட்டி வருகின்றனர்.