
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. பொதுவாக சிங்கம் மற்றும் புலி போன்ற பல விலங்குகள் ஒரே பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு ஒன்றாக இருக்கும் விலங்குகள் தங்களின் இயல்பிலிருந்து விலகி மற்ற விலங்குகளுடன் ஜாலியாக பழகிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கின்றது.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சிம்பன்சி குரங்கு அங்கு இருக்கும் மற்ற விலங்குகளுடனும் அதன் குட்டிகளுடனும் ஜாலியாக விளையாடுகின்றது. அன்பை அளவில்லாமல் பொழிந்து கொண்டிருக்கும் சிம்பன்சி குரங்கு சின்ன குட்டிகளுடன் தனது தாய்ப் பாசத்தை பகிர்ந்து கொள்கின்றது. சிறுத்தை குட்டி ஒன்று ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது சிம்பன்சி குரங்கு அதனுடன் விளையாடுகிறது. இரண்டும் முத்தமழை பொழிந்து கொண்டிருக்கும் போது புலிக்குட்டிக்கு பசி ஏற்பட்டு விட்டதை கண்டுபிடிக்கிறது. உடனே குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் குட்டியில் பாலை எடுத்து வரும் சிம்பன்சி குரங்கு சிறுத்தை குட்டியை மடியில் வைத்து பாலூட்டுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Animals have an incredible ability to understand and feel love. 🐾💕
— Tansu YEĞEN (@TansuYegen) August 4, 2023