திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மனநல பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதோடு ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களுடன் சேர்ந்து மனநல பாதித்த சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி வாலிபர் அதனை வீடியோ பதிவு செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் மற்றும் அந்த இரு சிறுவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் ஆர் சிறையில் அடைத்த நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
