மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பஜோக்கி பகுதியில் மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பேரன் தாக்கியதில் படுகாயமடைந்த 68 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு வசிக்கும் ராம்தாஸ் (28) கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருடன் வசித்து வந்த பாட்டி பஞ்புலா ராம்கிஷன் (68) கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்தபோது, திடீரென பேரன் ராம்தாஸ் அவரை கட்டை கொண்டு தாக்கியுள்ளார்.
குடும்பத்தினர் காயமடைந்த பாட்டியை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பஞ்புலா ராம்கிஷன் நேற்று உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பேரன் ராம்தாஸ் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
