மத்திய பிரதேசம் ஹர்தாவில் பட்டாசு ஆலை தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்து வெடித்து கொண்டிருப்பதால் தீயணைப்பு துறையினரால் நெருங்க முடியவில்லை. பட்டாசு ஆலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை அருகே சாலையில் சில உடல்கள் கிடக்கின்றன. இதில் அருகில் இருந்த 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குண்டுவெடிப்பின் தீவிரம், நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சியோனி மால்வா பகுதியைச் சேர்ந்த மக்கள் நடுக்கம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அதிகாரிகளுடன் பேசி, சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். இந்த சம்பவத்தின் வீடியோவில், தொழிற்சாலையில் இருந்து உயரமான தீப்பிழம்புகள் மற்றும் புகை மூட்டப்படுவதைக் காட்டுகிறது. அதை ஒட்டிய சாலையில் வெடிப்புச் சத்தம் காற்றில் ஒலிப்பதால் மக்கள் பீதியில் ஓடுவதைக் காணலாம்.

தீ விபத்திற்குப் பிறகு தப்பியோடிய தொழிற்சாலை ஊழியர் ஒருவர், சம்பவம் நடந்தபோது சுமார் 150 தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்ததாகக் கூறினார். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையையும் அழைத்துள்ளோம் என்று மாவட்ட ஆட்சியர் ரிஷி கர்க் தெரிவித்தார்.