
நாடாளுமன்றத்தில் வருகின்ற 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-25 தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கு 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் நிதி விடுவிக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். நடுத்தர மக்கள் பத்து வருடங்களாக வரிசுமை குறைக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனையடுத்து கோவை மற்றும் மதுரை இடையேயான மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க நிதி ஒதுக்க வேண்டும். மேலும் கிராமப்புற மற்றும் நகர்புற வீட்டு வசதி திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரவை உயர்த்துதல் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள #Budget2024-இல்,
🚆 மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் #ChennaiMetroRail திட்டத்திற்கான நிதி
🛣️ தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்
🧑🧑🧒🧒 பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை…
— M.K.Stalin (@mkstalin) July 21, 2024