மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு ஏராளமான உதவி தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாதம் 12400 ரூபாய் 24 மாதங்களுக்கு உதவி தொகை பெற முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏ ஐ சி டி இ முதுகலை பொறியியல், எம்டெக், எம் ஆர்க், முதுகலை வடிவமைப்பு ( M.E, M.Tech M.Arch, M.Des.) ஆகிய படிப்புகளில் சேரும் மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் https://pgscholarship.aicte-india.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தகுதி சரிபார்க்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.