இந்தியாவில் தற்போது மாநிலங்களவை குறித்த விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் பல கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வரும் நிலையில் மணிப்பூர் கலவரம் காரணமாக 14,763 பள்ளி குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நிவாரண முகாம் நடைபெற்று வருவதாகவும் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அதன் கீழ் உள்ள மத்திய ஆயுதப்படைகள் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய துறைகளில் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 265 காலி பணியிடங்கள் உள்ளது. நடப்பு ஆண்டில் 31879 பணியிடங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு அதில் 1126 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற பணியிடங்களுக்கான நியமனமும் விரைவில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.