மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இப்போது 42% ஆக இருக்கிறது. அதன்பின் மீண்டுமாக அகவிலைப்படி ஜூலை மாதம் உயர்த்தப்படும். அதனை தொடர்ந்து 46% ஆக அகவிலைப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அகவிலைப்படி மீண்டும் ஒரு முறை உயரவுள்ளது.

அந்த வகையில் கடந்த 2016-ம் வருடம் மத்திய அரசு விதித்த விதிப்படி 50% அகவிலைப்படி எட்டியதும் அது பூஜ்யமாக குறைக்கப்படும். இதனிடையே பூஜ்ஜிய அகவிலைப்படியின் காரணமாக ஊழியர்களுக்கு முந்தைய அகவிலைப்படி அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். கடந்த 2016-ம் வருடம் இந்த உயர்வு அமல்படுத்தப்பட்ட சூழலில், தற்போது மீண்டும் அது நடக்கயிருக்கிறது. அதன்படி அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைந்து மீண்டும் ஒரு முறை சம்பளம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விதி நடைமுறைக்கு வந்த பின் 2024-ம் வருடம் ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படும்.