பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசுவதற்காக, மல்யுத்த வீராங்கணைகள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் ஹரித்துவார் வந்துள்ளனர்.

WFI கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது, பாலியல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். ஒருவேளை வீராங்கணைகள் பதக்கங்களை நதியில் வீசிவிட்டால் அது நாட்டிற்கே பெரிய அவமானமாய் அமையும் என்று கூறப்படுகிறது.