இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் பணப்பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அரசு கட்டாயமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. முன்பே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. எனினும் பொதுமக்கள் பலரும் இதை முறையாக செய்யாத காரணத்தால் 3 மாதம் வரைக்கும் அதாவது ஜூன் 30ம் தேதி வரைக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இன்னும் ஆதார் எண்ணை பான்கார்டுடன் இணைக்க ஒரு மாத காலம் மட்டும் உள்ளதால் உடனே பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதோடு ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்காத பொதுமக்களின் பான் கார்டு ரத்துசெய்யப்படும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இப்போது திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.