திருவனந்தபுரத்தின் மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு சொந்தமான வீடு திருவனந்தபுரம் கொச்சுலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீட்டில் வேலை பார்க்கும் நபர் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சில இடங்களில் ரத்த கரையும் படிந்து இருந்தது. அதேபோல் கார் பார்க்கிங் பகுதியில் கற்கள் சிதறி கிடந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கண்ணூர் மாவட்டம் பையனூர் பகுதியைச் சேர்ந்த மனோஜை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து முதற்கட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரின்  வீட்டின் மீது ஏன் தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.