2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டில் 10.2.2023 வரை மொத்த வசூல் 24.9 சதவீதம்அதிகம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரடி வசூல்களின் தற்காலிக புள்ளி விவரங்களை தொடர்ந்து நிலையான வளர்ச்சியை காட்டுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதேபோல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான மொத்த நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 24.09 சதவீதம் உயர்வாகும்.

வரி செலுத்தியவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்ட நிகர தொகை தவிர்த்த நேரடி வசூல் ரூ.12.98 லட்சம் கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் ஒப்பிட்டு பார்க்கும்போது நிகர வசூலை விட 18.40 சதவீதம் அதிகமாகும். 2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வரிகள் வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் இந்த வரித்தகையானது 91.39 சதவீதம் ஆகும். அதே போல் 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 78.65 சதவீதம் ஆகும்.

மொத்த வருவாய் அடிப்படையில் கார்ப்பரேட், வருமான வரி மற்றும் தனி நபர் வருமான வரி போன்றவற்றின் வளர்ச்சி விகிதத்தை பொருத்தவரை சிஐடியின் வளர்ச்சி விகிதம் 19.33% ஆகவும், பி.ஐ.டி யின் வளர்ச்சி விகிதம் 29.63 சதவீதமாகவும் இருக்கிறது. அதேபோல் வரி செலுத்துபவருக்கு பணத்தை திருப்பி அளித்தல் தொடர்பான சரி செய்தலுக்கு பின் சி.ஐ.டி வசூல் நிகர வளர்ச்சி 18.84 சதவீதமாகவும் பி.ஐ.டி வசூலில் வளர்ச்சி 21.93 சதவீதமாகவும், எஸ்டிடி உள்ளிட்ட வளர்ச்சி 21.23 சதவீதமாகவும் இருக்கிறது. ஏப்ரல் 1, 2022 முதல் பிப்ரவரி 10,2023 வரை ரூ.2.69 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி வழங்கப்பட்ட பணத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது 61.58 சதவீதம் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.