
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண் பட்டப்படிப்பு முடித்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஆறு மாதங்கள் வேலை பார்த்த நிலையில் பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறொரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அந்த இளம் பெண் ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்ற நிலையில் தவறான நட்பின் காரணமாக மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானார். இந்த பெண் தற்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார்.
அதாவது அவருடன் ஒன்றாக வேலை பார்த்த புளோரிடா என்ற பெண் அவருக்கு நெருங்கிய தோழியாக இருந்த நிலையில் இவர்கள் இருவரும் விடுதியில் ஒன்றாக தங்கி இருந்ததோடு தினசரி மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். கடந்த மே மாதம் 27 ஆம் தேதி புடோரிடா ஒரு மது விருந்துக்கு அந்த இளம் பெண்ணை அழைத்த நிலையில் இருவரும் அங்கு மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தன்னுடைய நண்பர்கள் என கூறி ப்ளோரிடா மானசே (29) ஆக்னசே (30) ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தோம். மது போதையில் நான் மயங்கி விட்ட நிலையில் மறுநாள் எழுந்து பார்க்கும்போது மானாசே என்னுடன் நிர்வாணமாக படுத்திருந்தார்.
நானும் நிர்வாணமாக கிடந்த நிலையில் அவருடன் சண்டை போட்டேன். அப்போது ப்ளோரிடா எங்களுடன் வந்த மற்றொரு ஆணுடன் ஒரே அறையில் தங்கி இருந்த நிலையில் அவரிடமும் சண்டை போட்டேன். நான் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது தான் கொடூரமாக என்னை பலாத்காரம் செய்ததாக டாக்டர்கள் கூறினர். இதனால் என்னுடைய தாயார் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார். மேலும் அது போதையில் இருக்கும் போது என்னை பலாத்காரம் செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.