தமிழகத்தில் திருவாரூர், நாகை, குமரி மற்றும் தேனியாகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 19ஆம் தேதி முதல் காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகின்றது. இதற்காக அப்பகுதியில் விற்கப்படும் மது பாட்டில்கள் கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்கப்படும். அதன் பிறகு காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த தொகை திரும்ப வழங்கப்படும். ஏற்கனவே இந்த திட்டம் நீலகிரி மற்றும் ஏற்காடு போன்ற பகுதிகளில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.