மதிமுக சட்ட திட்டங்களுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கட்சியில் இருந்து நிரந்தர நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
துரை வைகோவும், மல்லை சத்யாவும் இடையே பல்வேறு பிரச்னைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நீண்ட நாட்களாக நிலவி வந்தன. இதன் போது, சத்யாவை “துரோகி” என வைகோ குறிப்பிட, அதற்கு எதிராக மல்லை சத்யா போராட்டங்களை முன்னெடுத்தார். இதன் பின்னணியிலேயே மதிமுக தலைமையகம் இந்த தற்காலிக நீக்கத்தை அறிவித்துள்ளது.
