மணிப்பூரில் இருபிரிவினர்கள் இடையில் எழுந்த மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கடந்த சில காலமாகவே இரு பிரிவினர் மத்தியில் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் நடத்திய ஒற்றுமை பேரணியில் வெடித்த கலவரம் மணிப்பூரையே தீக்கிரையாக்கி இருக்கிறது. இரு பிரிவினர்களிடையே மோதல் வெடித்த நிலையில், வீடுகள் கடைகள் தீவைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையால் அவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து வரும் மாவட்டங்களில் போக்குவரத்து சேவை தடைசெய்யப்பட்டதோடு 5 நாட்களாக இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.