நாடு முழுவதும் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்த உத்தரவை வெளியிட்டு உள்ளது.

அந்த அடிப்படையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் இப்போது ஜனவரி 1, 2023 முதல் அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 42% அகவிலைப்படியை பெற உள்ளனர். அதோடு இந்த திருத்தப்பட்ட விகிதம் முந்தைய விகிதத்திலிருந்து 4 சதவீதம் அதிகமாகும். DA மாநிலத்துக்கு மாநிலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தினை பொறுத்து வேறுபடும்.