இந்தியாவில் கருவுற்று இருக்கும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசானது கடந்த 2016-ம் வருடம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித் தொகை 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதில் முதற்கட்டமாக கர்ப்பிணிப் பெண் தன் கர்ப்பத்தை பதிவு செய்யும்போது ரூ.1,000 வழங்கப்படுகிறது. அதன்பின் கர்ப்ப காலத்தில் ரூ. 2000, குழந்தை பிறந்த பிறகு ரூ. 2,000 என தொடர்ச்சியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சையை பெறும் நோக்கில் இந்த உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.