சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக திருமண வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே இந்தியாவில் திருமண விழாக்களை கோலாகலமாக நடத்துவார்கள்.  இப்படி நடத்தப்படும் திருமணங்களின் போது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பது உண்டு. அது குறித்த வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மணமேடையில் மணமகனும் மணமகனும் நின்று கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர்.

அப்போது மணமகனின் நண்பர்கள் மணமகளை தூக்கிக் கொண்டு போஸ் கொடுக்க சொல்கிறார்கள். உடனே வெட்கப்பட்டு மணமகள் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் மணமகனும் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மணமகளை தூக்குகின்றார். மூன்று முறை முயற்சி செய்தும் முடியாமல் போகும் நிலையில் கடைசியில் எப்படியோ மாப்பிள்ளை மணமகளை தூக்கி விடுகின்றார். ஆனால் இறுதியாக இருவரும் மேடையிலேயே விழுந்து விடுகின்றனர். தற்போது இந்த நகைச்சுவையான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.