பொதுவாகவே தமிழர்களின் சமையலில் மசாலா பொருட்கள் என்பதை இன்றியமையாத ஒன்று. இதனைப் பயன்படுத்துவதால் உணவுக்கு இயற்கையாக சுவை மற்றும் மணம் என அனைத்தும் கிடைக்கிறது. இதனைத் தாண்டி உடலுக்கு தேவையான ஆரோக்கியங்களும் இதில் கிடைக்கின்றன. எந்த பொருளுக்கும் காலாவதி என்ற ஒன்று உண்டு. அதுவரை நாம் மசாலா பொருட்களை பாதுகாத்து வைக்க வேண்டும். அப்படி பாதுகாக்காமல் வைத்தால் மசாலா பொருட்களின் மணம் மற்றும் சுவை மாறுபட அதிக வாய்ப்பு உள்ளது. மொத்தமாக வாங்கி சேமித்து வைத்தால் மசாலா பொருட்களை நீண்ட நாட்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் மசாலா பொருட்களை பயன்படுத்திய பிறகு அதன் பாட்டில் முடிகளை உடனே மூட வேண்டும்.

மசாலா பொருட்களை சூரிய ஒளியில் படும்படி எக்காரணத்தை கொண்டும் வைக்கக்கூடாது. காற்று புகாத கலன்களில் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.

களஞ்சியப்படுத்தும் போது கிளாஸ் அல்லது மெட்டல் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

பொடிகளை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட முழு மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம்.

சமையலறையில் ஈரம் படக்கூடிய இடங்களில் மசாலா பொருட்களை வைக்கக்கூடாது.

கடைகளில் இருந்து வாங்கக்கூடிய மசாலா பொருட்களின் காலாவதியாகும் தேதி மற்றும் அதன் பெயர் என்பவற்றை சிறுதுண்டில் எழுதி வைப்பது நல்லது.

மசாலாக்களை மறந்தும் இரும்பு பாத்திரத்தில் போட்டு விடாதீங்க. இதனால் பின் விளைவுகள் அதிகம்.