பொதுவாகவே உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நாம் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்போம். அதில் உணவு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல பொருள்களை சேமித்து வைக்கிறோம். ஆனால் குளிர்சாதன பெட்டியில் சில பொருட்களை தவறியும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உணவின் பண்பில் மாற்றம் ஏற்படும். அதன்படி குளிர்சாதனப் பெட்டியில் எந்தெந்த பொருட்களை வைக்கக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

ஒருபோதும் குளிர்சாதனை பெட்டியில் உரித்த பூண்டை வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் பூண்டு வெளியில் வைக்கலாம். குளிர்சாதன பெட்டியில் மட்டும் வைக்கக்கூடாது. அதனை மீறினால் பூண்டின் குணநலத்தில் மாற்றம் ஏற்படும்.

பொதுவாகவே வெங்காயம் குறைந்த வெப்பநிலையை தாங்கும். இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது மாவு சத்து சர்க்கரை ஆக மாறிவிடும். அதேசமயம் நச்சுத்தன்மையாகவும் மாற வாய்ப்புள்ளது.

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய முக்கியமான மூலிகை பொருள்களில் ஒன்றாக உள்ள இஞ்சியை வெளியில் வைத்தால் கூட குணம் மாறாமல் இருக்கும்.

எக்காரணத்தைக் கொண்டும் அரிசியை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. அரிசி மட்டுமல்லாமல் மாவு சத்து கொண்ட எந்த பொருட்களையும் குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது.

பழைய சாதம் குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுக்கப்படும் உணவுகளை மீண்டும் சூடு பண்ணும் போது அது ஆரோக்கியத்தில் மாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும்.

இதுபோன்று வெள்ளரி, உருளைக்கிழங்கு, ஆப்பிள், வாழைத்தண்டு, பெர்ரிப் உள்ளிட்ட பழங்களையும் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் நச்சுத்தன்மையாக மாற வாய்ப்புள்ளது.