பொதுவாக தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தலை முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக வருகிறது. இந்த நிலையில் பெண்கள் தங்களுடைய கூந்தலை எப்படி பராமரித்துக் கொள்வது என்று தெரியாமல் கிடைக்கும் அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். கடையில் கிடைக்கும்  ரசாயனம் கலக்கப்பட்ட எண்ணெய், ஷாம்புகள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இதனால் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்காது. வீட்டில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மாத்திரமே நிரந்தரமான தீர்வு பெற முடியும்.

தலையில் வறட்சி அதிகமாக இருக்கும் பொழுது தலைமுடி உதிர்வு ,வெடிப்பு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சினைகள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் உச்சந்தலைக்கு கொஞ்சமாக எண்ணெய் வைக்கலாம். இதனால் தலை முதல் கால் வரை ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதால் தலைமுடி பிரச்சனையோடு சேர்த்து மன அழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது.

தலைக்கு எண்ணெய் வைக்காத காரணத்தால் தலையில் சொறி ஏற்படும். இதை நம்முடைய நகங்களை பயன்படுத்தி சொரிந்தாலும் புண் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும். தினமும் எண்ணெய் வைத்தால் இந்த பிரச்சினை வராமல் தடுக்கலாம். தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடி கருப்பாகவே வைத்துக் கொள்ளும். முடி நிறத்தில் மாற்றத்தை கொண்டு வராது. தலைமுடி உதிர்வு சாதாரணமாக இருக்கும் பொழுது எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்தாது. அதே சமயம் அதிகமாகும் பொழுது தலை சொட்டையாக கூட வாய்ப்பிருக்கிறது. தலைமுடிக்கு சரியான மருந்தை கொடுப்பது தேங்காய் எண்ணெய் அதை தினசரி தலைக்கு வைப்பது சிறந்தது.