பொதுவாக தேங்காயை காய வைத்து எண்ணெய் எடுப்பது தான் நம்முடைய வழக்கம். ஆனால் உலர் தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காய்ந்த தேங்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.