
மக்கள் மயோனைஸ் கலந்த ஷவர்மா சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அது மக்களின் உடல் நலத்தை பாதிக்கிறது. மயோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும் அது மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுந்ததல்ல எனவும் ஹைதராபாத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் முட்டை கொண்டு செய்யப்படும் மையோனைசின் பயன்பாடு மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என தெலுங்கானா அரசுக்கு ஹைதராபாத் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்துள்ளனர்.