கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரிழப்புக்குப் பிறகு, தனது நிலைப்பாட்டை விளக்கமாக வெளியிட்டுள்ளார். “இந்த சம்பவத்தில் எங்கள் மீது எந்தவிதமான தவறும் இல்லை.
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், உண்மைகள் விரைவில் வெளிச்சம் பெறும்” என அவர் வலியுறுத்தினார். மேலும், “கரூரில் நடந்ததைப் பற்றி மக்கள் பேசுவது, கடவுள் நேரில் இறங்கி வந்து சாட்சி சொல்வது போல இருந்தது” என அவர் உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
“>
விஜயின் இந்தக் குறிப்பு, சம்பவத்துக்குப் பிறகு அவர்மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாகக் கருதப்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்ட சூழல் குறித்து மக்கள் மத்தியில் ஏற்கனவே பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் நிலையில், “எல்லா உண்மைகளும் விரைவில் வெளிவரும்” என்ற அவரது உறுதி, தவெக தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
