கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரடியாக சாடியுள்ளார்.

“பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னைத் தண்டியுங்கள், என்னை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், என் தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம்” என அவர் வலியுறுத்தினார். மேலும், கரூரில் மட்டும் இப்படியான துயரச் சம்பவம் நடந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், அதற்கான பதிலை மக்கள் அறிந்திருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

தன்னை குறிவைத்து அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தனது அரசியல் பயணத்தை எவ்விதத்திலும் பாதிக்காது என விஜய் சவால்விடுத்தார். “என் அரசியல் பயணம் இனிதான், வலிமையோடு தொடர்ந்து செல்லும். மக்களின் ஆதரவு எனக்கு துணை நிற்கிறது” என்று உறுதிபடக் கூறிய விஜயின் இந்தக் குறிப்பு, தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.