பத்து வருடத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் புதுப்பிக்காத அட்டைகள் செல்லுபடி ஆகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலான ஆதார் அட்டைகளை புதுப்பிக்கும் பணியானது இ சேவை மையத்தில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு உட்பட வரையறுக்கப்பட்ட ஆவணங்களின் மூலமாக ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் இ சேவை மைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு இ சேவை மையங்களை நாடலாம் என்றும் கூறியுள்ளனர்.