சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் 12.15 மணிக்கு மதுரை சென்றடையும். பின்னர் மறு மார்க்கமாக மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்ற நிலையில் தற்போது சோதனை அடிப்படையில் பிப்ரவரி 26 முதல் 6 மாத காலத்திற்கு தாம்பரத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.